Propellerads
Navigation

விஜய்யின் கவனத்தை இழுக்கும் மஞ்சிமா மோகன்!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்த பிறகு தமிழுக்கு வந்தவர் மஞ்சிமா மோகன். கெளதம்மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுடன் நடித்து வந்தபோதே பலரது கவனத்தை இழுத்த அவர், விக்ரம் பிரபுவுடன் முடிசூடா மன்னன் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதையடுத்து கெளரவ் இயக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். தெலுங்கிலும் அச்சம் என்பது மடமையடா படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் அறிமுகமாகி விட்டார்.

மேலும், இந்த படம் இரண்டு மொழிகளிலுமே வெற்றி பெற்றிருப்பதால் இப்போது ராசியான நடிகை பட்டியலில் சேர்ந்து விட்டார் மஞ்சிமாமோகன். அதனால் இந்த வேகத்தில் கீர்த்தி சுரேஷ் போன்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாகி விட வேண்டும் என்கிற முயற்சிகளிலும் இறங்கியுள்ளார் அவர். அதன்காரணமாக, விஜய்யின் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக, நான் கேரளாவில் இருந்தபோதே விஜய்யின் தீவிரமான ரசிகை என்று சொல்லிக்கொண்டு அடுத்து அவரை வைத்து படம் இயக்கயிருக்கும் அட்லி உள்ளிட்ட டைரக்டர்களை சந்தித்து படவேட்டை நடத்தி வருகிறார் மஞ்சிமா மோகன்.
Share
Banner

Post A Comment: