நடிகை த்ரிஷா சினிமாவுக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. வயதும் 30ஐ கடந்து விட்டது. ஆனாலும் இன்னும் இளமையோடு இருக்கிறார். ஹீரோயினாக நடித்து வருகிறார். தன்னை விட வயது குறைந்த நடிகர்களுக்கும் ஜோடியாக நடிக்கிறார்.
தெரு நாய்களை பாதுகாப்பதும், சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்குவதும் த்ரிஷாவின் மற்ற முகங்கள். சமீபத்தில்கூட 500, 1000 ரூபாய் நோட்டுக்கு தடை குறித்து அதனை வரவேற்று டுவிட்டரில் எழுதியிருந்தார். தனது பயணங்கள், தோழிகள் ஆகியோரை டுவிட்டரில் அப்லோட் செய்து கொண்டிருப்பார். டுவிட்டரின் தன்னை பற்றி வரும் மோசமான கமெண்டுகளை பற்றி கவலைப் படாமல் இருப்பவர்.
தற்போது த்ரிஷாவை டுவிட்டரில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 30 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். "பின் தொடரும் ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அனைவருக்கும் எனது அன்பு முத்தங்கள்" என்று கூறியிருக்கிறார்.



Post A Comment: