பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை மகாநதி என்ற பெயரில் திரைப்படமாக தெலுங்கில் எடுத்து வருகின்றனர். தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டு தமிழ், மலையாளத்தில் டப் செய்யப்பட்டு ஒரே நாளில் மூன்று மொழிகளில் மகாநதி படம் வெளியாக உள்ளது.
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற யவடு சுப்பிரமணியம் என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறது. மகாநதி படத்தில் சாவித்திரியாக நடிப்பவர் கீர்த்தி சுரேஷ்.
சாவித்ரியைத் திருமணம் செய்த ஜெமினி கணேசனின் பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். சாவித்திரியிடம் பேட்டி எடுப்பதன் மூலம் அவரது கடந்த காலத்தை ப்ளாஷ்பேக்கில் கொண்டு வருவதற்கு உதவும் ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார்.
சாவித்ரியின் இளமைக்காலக் காட்சிகளில் தற்போது கீர்த்தி நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக இருந்தபோது எடை அதிகரிப்பு பிரச்சினையால் சாவித்திரி சிரமப்பட்டு வந்தார். அந்தக் காட்சிகளை படமாக்கும்போது தனது உடல் எடையை கீர்த்தி சுரேஷ் அதிகரிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நாம் விசாரித்த வகையில் இந்த தகவல் வதந்தி என்றும், பப்ளிசிட்டிக்காக இப்படிப்பட்ட பொய் செய்திகள் பயன்படுத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள் படத்துறையினர். நாம் ஏற்கனவே சொன்னது போன்று கிராபிக்ஸ் மூலம் அவரை குண்டாக காண்பிக்கும் உத்தியை பயன்படுத்த போகிறார்களாம்.
Post A Comment: