ஒரே படத்தில் இரண்டு அல்லது மூன்று நடிகைகள் இணைந்து நடிப்பது கோலிவுட் திரையுலகில் சகஜமான ஒன்றே. விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தில் காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யாமேனன் என மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர். ஆனால் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் இணைந்து நடிப்பது அபூர்வமான ஒன்று. அந்த வகையில் தற்போது காஜல் அகர்வால் மற்றும் எமிஜாக்சன் ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
பாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடித்த 'குயீன்' படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. கங்கனாவுக்கு தேசிய விருது கிடைத்த இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை பெற்றுள்ள நடிகர் தியாகராஜன், தமன்னா நடிப்பில் நான்கு மொழிகளில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால் தற்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக தமன்னா இந்த படத்தில் இருந்து விலக, அவருக்கு பதிலாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் காஜல் அகர்வாலின் தோழியாக எமிஜாக்சன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
'பட்டர் பிளை' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தமிழ், மற்றும் கன்னட பதிப்பை ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கமல் நடித்த 'உத்தமவில்லன்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த படத்துக்கான வசனத்தை சுஹாசினி எழுதி, ரேவதி இயக்குவதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என தெரிகிறது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: