Propellerads
Navigation

தனுஷ் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியமைக்கு இதுதான் காரணம்!

தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் வட சென்னை படம் சுமார் 45 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்த தகவலை தனுஷ், வெற்றிமாறன், விஜய்சேதுபதி மூவருமே உறுதி செய்திருந்தனர்.

இந்நிலையில் இப்போது வட சென்னை படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகிவிட்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதிலாக இயக்குநர் அமீர் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 
வட சென்னை படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கு கால்ஷீட் பிரச்சனைதான் காரணம் என சொல்லப்பட்டாலும், உண்மைக் காரணம் வேறு என்கிறார்கள் வட சென்னை படத்தில் சம்மந்தப்பட்டவர்கள்.

கால்சீட் பிரச்னை மட்டுமல்ல, சம்பள விசயத்திலும் சரிவர உடன்பாடு ஏற்படாததால் விஜய் சேதுபதி விலகியதாக கூறப்படுகிறது.


Share
Banner

Post A Comment: