சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் விவேகம்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தொடர்ந்து நடைபெற்றது. குறிப்பாக பல்கேரியா நாட்டில் அதிகமாக நடத்தப்பட்டது.
இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பின் போது அஜித்திற்கு தோள் பட்டையில் காயம் அடைந்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. காயம் அடைந்தாலும் படப்பிடிப்பு தடைபடக் கூடாதென அஜித் காயத்துடன் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து முடித்தார் என்கிறார்கள்.
வேதாளம் கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் அஜித்திற்கு காலில் காயம் அடைந்ததைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் ஆபரேஷன் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து சில மாத காலம் ஓய்வில் இருந்தார். ஓய்விற்குப் பிறகுதான் விவேகம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இப்போது விவேகம் படப்பிடிப்பின் கிளைமாக்சிலும் அஜித்திற்கு காயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதே சமயம், காயத்தின் தன்மை பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
Post A Comment: