‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் – சிவா காம்போவில் உருவாகி வரும் மூன்றாவது படம் ‘விவேகம்’. ஏற்கெனவே, இவர்கள் கூட்டணியில் வந்த ‘வீரம், வேதாளம்’ ஆகிய இரண்டு கமர்ஷியல் படங்களுமே மெகா ஹிட். ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்ததிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது. ‘தல’ அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் என இரண்டு ஹீரோயின்ஸாம். வில்லன் வேடங்களில் விவேக் ஓப்ராய், ஆரவ் சௌத்ரி இருவரும் மிரட்டவுள்ளனர்.
மேலும், தம்பி ராமையா, கருணாகரன், அப்புக்குட்டி, மொட்ட ராஜேந்திரன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறதாம். அனிருத் இசையமைத்து வரும் இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் இணைந்து மெகா பட்ஜெட்டில் தயாரித்து வருகின்றனராம். இப்படத்தில் அதிகமான சண்டைக் காட்சிகள் மற்றும் VFX காட்சிகள் உள்ளனவாம். சமீபத்தில், படத்தின் ஷூட்டிங் செர்பியாவில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து சில பேட்ச் வொர்க் மட்டுமே உள்ளதாகவும், அதை சென்னையில் படமாக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், நாளை (ஜூன் 22-ஆம் தேதி) மீண்டும் செர்பியாவிற்கு செல்லவிருக்கிறது படக்குழு. இங்கு தொடர்ந்து 5 நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனராம்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் ஏற்கெனவே துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ‘விவேகம்’ டீமால் ட்விட்டப்பட்ட போஸ்டர்ஸ், ஸ்டில்ஸ், அனல் பறக்கும் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் ‘SURVIVA’ எனும் சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. வெகு விரைவில் ஆடியோ & டிரையிலர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்விட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஆடியோ ரைட்ஸை பிரபல நிறுவனமான ‘சோனி மியூசிக்’ கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யவுள்ளனர்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: