சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' ஆகிய இரண்டு படங்களும் பிலிம்பேர் சவுத் விருதுகளுக்கு 8 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த படம், சிறந்த நடிகர் (ரஜினிகாந்த்), சிறந்த துணை நடிகை (தன்ஷிகா), சிறந்த இயக்குனர் (ரஞ்சித்), சிறந்த இசையமைப்பாளர் (சந்தோஷ் நாராயணன்), சிறந்த பாடல் (நெருப்புடா), சிறந்த பாடகர் (அருண்காமராஜ்), சிறந்த பாடகி (ஸ்வேதா மேனன்) ஆகிய பிரிவுகளுக்கு 'கபாலி' பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
அதேபோல் தெறி திரைப்படமும் சிறந்த படம், சிறந்த நடிகர் (விஜய்), சிறந்த நடிகை (சமந்தா), சிறந்த இயக்குனர் (அட்லி), சிறந்த இசையமைப்பாளர் (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த துணை நடிகர் (மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன்), சிறந்த துணை நடிகை (ராதிகா), சிறந்த பாடகி (நீதிமோகன்) ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு படங்களும் அதிகபட்ச விருதுகளை வென்று குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இரண்டு படங்களையும் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: