‘யாக்கை’ படத்திற்கு பிறகு கிருஷ்ணா நடித்துள்ள ‘பண்டிகை, விழித்திரு’ ஆகிய 2 படங்களும் வெளியீட்டிற்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இது தவிர கிருஷ்ணா நடித்த ‘வீரா, கிரகணம்’ படங்களின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ‘கிரகணம்’ படத்தை அறிமுக இயக்குநர் இளன் என்பவர் இயக்கியுள்ளாராம். கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நந்தினி ராய் டூயட் பாடி ஆடியுள்ளார்.
மேலும், ‘கயல்’ சந்திரன், கருணாஸ், கருணாகரன், ஜெயபிரகாஷ், மீரா மிதுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனராம். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து வரும் இதற்கு ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் புரொடக்ஷன், ஹையசி இண்டர்நேஷனல், கே.ஆர்.பிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து இதனை தயாரிக்கிறது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: