பிரபல பாடகர் எஸ்பி. பாலசுப்பிரமணியம், அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது அவருடைய கடவுச்சீட்டு, இசைக்குறிப்புகள் ஆகியவை ஒருசில முக்கிய பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே.
கிட்டத்தட்ட அதே நிலைமை அதே அமெரிக்காவில் பிரபல பின்னணி பாடகிக்கும் தற்போது நேர்ந்துள்ளது.
பிரபல பாடகியும், பின்னணி குரல் கொடுப்பவருமான சின்மயி, அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிக்கோ நகருக்கு ஒரு இசை பயணத்துக்காக அண்மையில் சென்றிருந்தார்.
அங்குள்ள வானக தரிப்பிடம் ஒன்றில் காரை நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் கழித்து மீண்டும் திரும்பியபோது தன்னுடைய கார் படுமோசமாக பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டு கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
5 நிமிடங்கள் என்ன நடந்தது என்பதையே ஊகிக்க முடியாமல் அதிர்ச்சியில் மூழ்கியிருததாகவும், அதன்பின்னரே தனது காரில் இருந்த பொருட்கள் திருடப்பட்டதையும் அவர் உணர்ந்தாராம்.
இதுகுறித்து அவர் பொலிஸாரிடம் தெரிவித்தபோது “இங்கு காரில் திருடு போவது சர்வ சாதாரணம்” என்று கூறியதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார். நல்லவேளையாக, காரில் திருட முயன்ற பெண்ணை ஒருவர் அடையாளம் கண்டுள்ளார்.
அந்த பெண்ணுக்கு தலைமுடி சிவப்பாக இருக்கும் என்று கூறியதை அடுத்து அந்த பெண்ணை தேடி அமெரிக்க பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.
Post A Comment: