இளையதளபதி விஜய் நடித்து வரும் “தளபதி 61” திரைப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக், ஜூன் 22ஆம் திகதி விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக செய்தி பரவி வந்தது.
ஆனால், இதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தற்போது கூறப்படுகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அண்மையில், மத்திய மாநில அரசாங்கங்களுக்கு சில கோரிக்கைகளை விடுத்து, அந்த கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் ஜூன் 1ஆம் திகதி முதல், ஒட்டுமொத்த திரையுலகமே இணைந்து போராட்டம் மற்றும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த போராட்டம் தொடங்கிவிட்டால் எப்போது முடியும் என்பது தெரியாது. எனவே போராட்டம் முடியும்வரை புதிய திரைப்படங்களில் அறிவிப்பு, ஃபர்ஸ்ட்லுக் டிசர் உள்பட எதுவுமே வெளியாகாது என்பதால், “விஜய் 61” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடுவதிலும் சிக்கல் நேரலாம் என்பது குறித்து படக்குழுவினர் ஆலோசனை செய்துள்ளனர்.
இதன்படி வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடலாம் என்று முடிவு செய்ததோடு, மே 11ஆம் திகதி ஃபர்ஸ்ட்லுக் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டனர்.
ஆனால், அஜீத்தின் “விவேகம்” திரைப்படத்தின் டீசர் அதே திகதியில் வெளிவருவதால், விஜய் இந்த திட்டத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து “தளபதி 61” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புதிய வெளியீட்டு திகதியை முடிவு செய்ய படக்குழுவினர் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர்.
வெகுவிரைவில் புதிய ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
Post A Comment: