நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படமாக்கப்படவுள்ளது என்றும், இதில் சாவித்ரி வேடத்தில் கீர்த்திசுரேஷ் மற்றும் ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்கவுள்ளதும் தெரிந்ததே.
இந்நிலையில் இந்த படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் சமந்தா நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அவர் பத்திரிகையாளர் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் சமந்தா நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அவர் பத்திரிகையாளர் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா என்ற தெலுங்கு நடிகர் நடிக்கவுள்ளாராம். மேலும் இவர்தான் முதலில் ஜெமினிகணேசன் கேரக்டருக்கு பரிசீலிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு 'மகாநதி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் இறுதியில் தொடங்கவுள்ளது. இந்த படத்தை நாக்-அஸ்வின் இயக்கவுள்ளார்.
Post A Comment: