'ராஜா ராணி' மற்றும் 'தெறி' என இரண்டே படங்கள் இயக்கிய இயக்குனர் அட்லி, தனது உதவியாளரை இயக்குனராக்கி அழகுபார்க்கவே தயாரித்துள்ள திரைப்படம் தான் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் வெற்றிகரமாக முடிந்து வரும் வெள்ளி அன்று வெளியாகவுள்ளது.
நடிகர் ஜீவாவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றி படங்கள் வராத நிலையில் இந்த படம் அவருக்கு ஒரு பிரேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 'மாவீரன் கிட்டு' படத்திற்கு பின்னர் ஸ்ரீதிவ்யா நடித்து வெளிவரும் இந்த படம் அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.
கோலிவுட்டின் தற்போதைய சீசனாக இருந்து வரும் காமெடி+ஹாரர் படங்களில் ஒன்றான இந்த படம், காமெடிக்கு கியாரண்டி என்பது சமீபத்தில் வெளிவந்த டிரைலரில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.
இந்த படத்தின் இயக்குனர் lke, நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எம்.ஆர்.ராதாவின் வாரிசுகளான ராதிகா, ராதாரவி ஆகியோர்களும் இந்த படத்தில் நடித்திருப்பதால் இந்த படம் எம்.ஆர்.ராதாவின் குடும்பப்படம் என்றும் கூறலாம். முதல் படத்திலேயே தனது தனி முத்திரையை வெளிப்படுத்தும் அளவுக்கு இயக்குனர் காட்சிகளை அமைத்துள்ளதாகவும், கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை இவர் கண்டிப்பாக பிடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் தம்பிராமையா, சூரி, இளவரசு, கோவை சரளா, தேவதர்ஷினி, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி என ஒரு காமெடி கூட்டமே இருப்பது சிரிப்புக்கு உத்தரவாதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அட்லியின் முதல் பட ஹீரோவான நடிகர் ஜெய் மற்றும் அக்சரா கெளடா ஆகியோர் இந்த படத்தின் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் சந்திரசேகர் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், டி.எஸ்.,சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை வரும் வெள்ளியன்று பார்ப்போம்.

Post A Comment: