Propellerads
Navigation

ஹீரோயின் ஆனார் பாபநாசம் எஸ்தர்

மலையாளத்தில் பிரபல குழந்தை நட்சத்திரம் எஸ்தர். 50க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 
 
பெரும்பாலும் ஹீரோயின்களின் குழந்தை பருவத்திலும், ஹீரோக்களின் தங்கையாகவும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்தார். 
 
த்ரிஷ்யம் தமிழில் பாபாநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனபோதும், அதிலும் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்தார். தெலுங்கு த்ரிஷயத்தில் வெங்கடேஷ் மகளாக நடித்தார்.
 
தற்போது 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு ரிசல்டுக்காக காத்திருக்கும் எஸ்தர், குழலி என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். 
 
இதனை அறிமுக இயக்குனர் சேர கலையரசன் என்பவர் இயக்குகிறார். இதில் எஸ்தர் தான் குழலியாக நடிக்கிறார். கிராமத்து பெண் வேடம். படத்திலும் 10ம் வகுப்பு மாணவியாகவே நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குகிறது.
Share
Banner

Post A Comment: