Propellerads
Navigation

சின்னத்திரையில் ஒரு 'பாகுபலி'

அரம்ப் (Arambh) என்ற டைட்டிலில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்தி தொலைக்காட்சி  தொடருக்கு 'பாகுபலி' படத்திற்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் அவர்கள் கதை எழுதுகிறார். 
'பாகுபலி' போலவே பிரமாண்டமாக தயாராகவுள்ள இந்த தொடரில் தேவசேனா என்ற இளவரசி கேரக்டரில் கார்த்திகா நடிக்கவுள்ளார். 

ஆனாலும் 'பாகுபலி' தேவசேனாவுக்கும் இந்த தேவசேனாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த தொடரில் நடிப்பது குறித்து கார்த்திகா கூறியபோது, 'என்னுடைய இளவரசி கேரக்டருக்காக பல சண்டைப்பயிற்சிகளை செய்து வருகிறேன். குறிப்பாக யானை, குதிரை மீது இருந்து கொண்டே வாள்சண்டை புரிவது, தண்ணீருக்குள் சண்டை புரிவது போன்ற பயிற்சிகளை செய்து வருகிறேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த தொடரில் கார்த்திகா தவிர மற்ற அனைவரும் பாலிவுட்டை சேர்ந்தவர்கள் என்றும், கோல்டி பெல் என்பவர் இயக்கும் இந்த தொடரில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Share
Banner

Post A Comment: