விஜய், காஜல் அகர்வால் உள்பட படக்குழுவினர் அனைவரும் தற்போது மாசிடோனியாவில் உள்ளதாகவும், அழகிய மலை மற்றும் இயற்கை அழகு உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் விஜய் மற்றும் காஜல் அகர்வால் இருவருமே டாக்டர்கள் கேரக்டரில் நடித்து வருவதாகவும், இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் நடந்த முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதே இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.


Post A Comment: