Propellerads
Navigation

சூப்பர் ஹிட் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே அரை டஜன் படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன '100% லவ்' என்ற படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கில் இந்த படத்தை இயக்கிய B.சுகுமார் தயாரிக்க, ஹாலிவுட் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய M.M.சந்திரமெளலி என்பவர் இயக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு டட்லி என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பாலிவுட்டில் 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'தில்வாலே', 'சிங்கம்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து இசையமைக்கும் இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Share
Banner

Post A Comment: