Propellerads
Navigation

பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா

பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மனீஷா கொய்ராலா. பாலிவுட் மட்டுமல்லாது, தமிழிலும் பிரபலமானவர் தான். 

ஆனால் இவரது சொந்த வாழ்க்கை சோகமானது. திருமண உறவு நீடிக்காமல் விவாகரத்து பெற்றார். தொடர்ந்து புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தவர், பின்னர் அதிலிருந்து மீண்டார். இப்போது எல்லாம் பிரச்னைகளையும் கடந்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். 

தற்போது அவர் டியர் மாயா என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ளது. இதனிடையே மனீஷா, இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுக்க உள்ளார்.

இதுகுறித்து மனீஷா கூறியிருப்பதாவது... "இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து தாய் ஆகலாம் என்று எண்ணியுள்ளேன். அதற்காக சட்ட ரீதியான பணிகளை துவக்கியுள்ளேன். இந்தாண்டு இறுதிக்குள் அல்லது 2018-ல் குழந்தைகளை தத்தெடுத்து விடுவேன்" என்று கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: