Propellerads
Navigation

இந்த வருடம் நான்கு இசை விருந்துகள்

அனிருத், அஜித்தின் 'விவேகம்', 'சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன் மற்றும் தெலுங்கில் பவன்கல்யாண் நடிக்கும் படம் என மொத்தம் நான்கு திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 

இந்த படங்களின் பாடல்கள் இந்த ஆண்டே ரசிகர்களுக்கு காத்திருப்பதாகவும், இந்த நான்கு படங்களின் இசை விருந்துகளும் ரசிகர்களுக்கு வெவ்வேறு இசை அனுபவத்தை கொடுக்கும் என்றும் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட நான்கு படங்களுமே பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த வருடம் அனிருத்துக்கு மறக்க முடியாத வருடமாக இருக்கும் என்றும் கோலிவுட்டில் கூறப்படுகிறது.
Share
Banner

Post A Comment: