Propellerads

About

Navigation
Recent News

64ஆவது தேசிய திரைப்பட விருதுகள்

64ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்து, சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சுந்தர் ஐயர் பெற்றனர். சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட “ஜோக்கர்” திரைப்படம் சார்பாக அதன் இயக்குநர் ராஜூ முருகன், விருதினை பெற்றார்.

“தர்மதுரை” திரைப்படத்தின் “எந்த பக்கம் பாடலுக்காக” வைரமுத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரைப்படமான ்ஜனதா கேரேஜ்”இல் பணியாற்றியதற்காக நடன இயக்குநர் ராஜூ சுந்தரத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் தனஞ்செயன், மோகன்லால் உள்ளிட்ட பலரும் தங்களுக்கான தேசிய விருதினை பெற்றுக் கொண்டனர்.

“புலி முருகன்” திரைப்படத்தில் பணியாற்றிய சண்டை இயக்குநர் பீட்டர் ஹெயின், தேசிய விருதினை பெற்றுக் கொண்டார். அதேபோல், இந்தியில் சோனம் கபூர், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோரும் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
.
Share
Banner

Post A Comment: