Propellerads
Navigation

ஆஸ்காருக்கு செல்கிறது 'பாகுபலி 2'

கடந்த வாரம் வெள்ளியன்று வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை நெருங்கி வருகிறது. உலக அளவில் ரூ.1000 கோடி வசூல் செய்த அவதார், டைட்டானிக், ஹாரிபாட்டர், லார்ட் ஆப் தி ரிங்ஸ்' ஆகிய படங்களின் வரிசையில் இந்திய திரைப்படம் ஒன்று இணையவுள்ளது ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தியாவுக்கே பெருமை சேர்த்த 'பாகுபலி 2' படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்த உள்ளதாகவும், அதுமட்டுமின்றி பாகுபலி படக்குழுவினர் அனைவரையும் அழைத்து பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

அடுத்த ஆஸ்கார் விருதில் 'பாகுபலி 2' திரைப்படம் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டால் நிச்சயம் விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தேசிய விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளையும் இந்த படம் குவிக்க வாய்ப்பு இருப்பதாக திரையுலகினர் கருதுகின்றனர்.
Share
Banner

Post A Comment: