Propellerads
Navigation

விஐபி 2' படத்திற்காக புதிய முயற்சி

விஐபி 2' படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் ஒரு மியூசிக் வீடியோவை தயாரித்துள்ளனர். தனுஷ், கஜோல் நடித்துள்ள இந்த மியூசிக் வீடியோ ரிலீசுக்கு முன்னர் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மியூசிக் வீடியோவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த தனுஷ் மற்றும் கஜோலுக்கு இயக்குனர் செளந்தர்யா தனது சமூக வலைத்த்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். வித்தியாசமான இந்த மியூசிக் வீடியோ புரமோஷன் படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படம் வரும் ரம்ஜான் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
Banner

Post A Comment: