'ரெமோ' படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினிகாந்த் நடித்த 'வேலைக்காரன்' பட டைட்டிலில் உருவாகி வரும் படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மோகன் ராஜா இயக்கி வரும் இந்த படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கின்றார்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட்டில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது 'வேலைக்காரன்' படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக மலேசியா செல்லவுள்ளனர். இந்த தகவலை இயக்குனர் மோகன்ராஜா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் பெரும்பகுதி மலேசியாவில்தான் படப்பிடிப்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.
இந்த படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ளது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: