பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஹாலிவுட்டிலும் கால்பதித்துவிட்டனர். இவர்களில் தீபிகா படுகோனே நடித்த டிரிபிள் எக்ஸ் படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
தீபிகாவை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா, ‛பேவாட்ச்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ராவுடன் பிரபல மல்யுத்த வீரரும், நடிகருமான ராக் எனும் டுவைன் ஜான்சன் முதன்மை ரோலில் நடிக்கிறார்.
இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்டில்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் தற்போது பிரியங்கா சோப்ராவை முன்னிலைப்படுத்தி ‛பேவாட்ச்' படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், பிரியங்கா சோப்ரா, சன்கிளாஸ் அணிந்தபடி புன்னகையுடன் போஸ் தருகிறார். அந்த கண்ணாடியில் பேவாட்ச் படத்தில் நடித்த நடிகர்கள் தோன்றுகிறார்கள். பேவாட்ச் படம் வருகிற மே 25-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
Post A Comment: