Propellerads
Navigation

நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மாணவர் கைது

கவுதம் கார்த்திக் நடித்த 'இந்திரஜித்' என்ற படத்தின் நாயகியும் இந்தி சீரியல் ஒன்றில் பார்வதி தேவியாகவும் நடித்து வருபவர் பிரபல நடிகை சோனாரிகா படோரியா. இவருக்கு மர்ம நபர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக செல்போனில் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.

முதலில் நடிகை சோனாரிகாவை தான் காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அந்த மர்ம நபர் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

ஆனால் இதை பெரிதாக கண்டுகொள்ளாமல் அந்த நம்பரை சோனாரிகா பிளாக் செய்துவிட்டார். ஆனால் தொடர்ந்து பல்வேறு எண்களில் இருந்து அவருக்கு காதல் மெசேஜ்கள் வந்து கொண்டே இருந்தது. அதில் ஆபாச புகைப்படங்களும் அடங்கும்.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகை சோனாரிகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிசார் விசாரணை செய்தபோது, அந்த மர்ம நபர், கல்லூரி ஒன்றில் 2ஆம் ஆண்டு படித்து வரும் மாணவர் என்பதை போலிசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
Share
Banner

Post A Comment: