Propellerads
Navigation

இறங்கி வந்த கேத்ரின் தெரசா

மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. அதன் பிறகு கதகளி படத்தில் நடித்தார். அவர் நடித்த கடம்பன் படம் சமீபத்தில் வெளிவந்தது.
 
இந்தப் படத்தின் புரமோசனுக்காக வந்திருந்த கேத்ரின் தெரசா பாதுகாப்புக்கு ஜிம் பாய்ஸ், மேக்அப் வுமன், டச் அப் வுமன் சகிதம் வந்திருந்தார். பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும்போது டச் அப் வுமன் டச்சப் செய்து கொண்டிருந்தார். 

அவரின் சொந்த ஊர் அப்பா அம்மா பற்றி கேட்டபோது நான் நான்கைந்து படங்களில் நடித்து விட்டேன் நான் புதுமுகம் அல்ல அப்புறம் ஏன் இந்த பழைய கேள்விகளையே கேட்கிறீர்கள் என்று கூறியதோடு அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்தார். தமிழ் பேசத் தெரிந்தும் தெரியாதவர் போன்று ஆங்கிலத்திலேயே பதிலளித்தார். 

கடைசியாக அவர் என் பேட்டியை நான் சொன்னபடி போடுங்கள் மாற்றிப் போட்டு விடாதீர்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் இப்போதே என்னிடம் கேட்டுக் கொள்ளுங்கள். என் பேட்டி தவறாக வந்திடக்கூடாது என்றார். சந்தேகம் வந்தால் கேட்பதற்கு உங்கள் தொலைபேசி எண்ணை தாருங்கள் என்று கேட்டபோது. என் போன் எண்ணை யாருக்கும் தருவதில்லை. வேண்டுமானால் என் மானேஜரை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்.

3 படங்களே நடித்துள்ள நிலையில் கேத்ரின் செய்தியாளர்களிடம் நடந்து கொண்ட விதம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை அறிந்த கேத்ரின் தெரசா கடம்பன் வெளிவந்த பிறகு மீண்டும் அதே செய்தியாளர்களை, அதே இடத்தில் சந்தித்தார். பாதுகாப்பு ஜிம்பாய்ஸ், டச் அப் வுமன் இல்லாமல் வந்தார். தமிழில் பேசினார். கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொன்னார். 

கேட்டவர்களுக்கெல்லாம் செல்போன் நம்பர் கொடுத்தார். கேத்ரின் தெரசாவின் இந்த மாற்றம் செய்தியாளர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.
Share
Banner

Post A Comment: