Propellerads

About

Navigation
Recent News

அஜித்தின் தெறிக்க வைக்கும் 'விவேகம்' பட ஸ்டில்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படபிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக அஜித், சிவா உள்பட படக்குழுவினர் அடுத்த வாரம் சென்னை திரும்பி, வரும் மே 1ஆம் தேதி வெளியாகவிருக்கும் டீசர் பணிகளை கவனிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென 'விவேகம்' படத்தின் புதிய ஸ்டில் ஒன்று இணையதளத்தில் மிக வேகமாக பரவியது. கருப்பு வெள்ளையில் இருந்த அந்த புகைப்படத்தில் அஜித் ஸ்டைலாக ஹெலிகாப்டர் அருகே நின்ற காட்சி அஜித் ரசிகர்கள் மத்தியில் தெறிக்க வைத்தது. டுவிட்டர் சமூக இணையதளத்தை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அஜித் ரசிகர்கள் இந்த ஸ்டில்லின் ஹேஷ்டேக்கை உலக அளவுக்கு டிரெண்ட்டில் பலமணி நேரம் வைத்திருந்தனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் வளர்ந்து வருகிறது.
Share
Banner

Post A Comment: