Propellerads
Navigation

'தல'யுடன் மீண்டும் கைகோர்க்கும் விஜய்-நயன்தாரா

ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் அடுத்த ஆண்டு முதல் களமிறங்கவுள்ளது என்றும் இந்த அணியில் தல தோனியை இணைக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்படும் என்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் ஐசிசி சேர்மன் சீனிவாசன் கூறியதை ஏற்கனவே பார்த்தோம்.

சென்னை அணிக்கு இரண்டு முறை கோப்பையை பெற்றுத்தந்த தோனியை தவிர வேறு யாரையும் இந்த அணியின் கேப்டனாக ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் தயாராக இல்லை என்ற நிலையே உள்ளது. எனவே தோனி தலைமையில் பலம் வாய்ந்த அணி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அணியை எந்த அளவுக்கு பலம் ஆக்குவது முக்கியமோ அதே அளவு அணியை பிரபலப்படுத்தும் தூதர்களுக்கும் முக்கியப் பங்குண்டு. அந்த வகையில் கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை அணியின் தூதர்களாக இருந்த இளையதளபதி விஜய் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரையும் மீண்டும் தூதராக்க சென்னை அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே தல தோனி தலைமையிலான சென்னை அணிக்கு மீண்டும் தளபதியும், லேடி சூப்பர் ஸ்டாரும் தூதுவர் ஆவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Share
Banner

Post A Comment: