பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்பவர் ஷாரூக்கான். தற்போது இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஒரு படத்தில் குள்ள மனிதராக வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ஷாரூக்கான் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு விஷயம் தனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
அப்படி எதை அவர் கஷ்டமாக இருக்கிறது என்று கூறுகிறார் என பார்ப்போம்.... ‛‛சிலர் என்னிடம் 1 நிமிடம் பேட்டி தர முடியுமா என்கிறார்கள்... ஒரே வார்த்தையில் உங்களைப்பற்றி விவரிக்க முடியுமா...?, அது எப்படி முடியும், முடியாது. அதேப்போன்று தான் ஒரு நிமிட பேட்டியில் என்ன சொல்லிவிட முடியும். நான் யார் என்று தெரிந்து கொள்வதற்கே 52 வருடங்களாகிவிட்டது.
அதிலும் 10 சதவீதம் தான் என்னைப்பற்றி தெரிந்து கொண்டுள்ளேன். ஆகவே இதுபோன்ற விஷயம் தனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
Post A Comment: