Propellerads
Navigation

சமந்தாவின் புதிய சவால்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய சமந்தா தற்போது பிசியான நடிகைகளில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தற்போது விஜய்யுடன் 'தளபதி 61', விஷாலுடன் 'இரும்புத்திரை', விஜய்சேதுபதியுடன் 'அநீதி கதைகள்' மற்றும் ஒருசில தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில் அவர் தற்போது சிலம்பம் பயின்று வருகிறாராம். புதிய சவால்களை ஏற்று அதை நிறைவேற்றுவதில் தனக்கு ஒரு ஹாபி என்றும் சமீபத்தில் தான் எடுத்துள்ள சபதம், சிலம்பத்தில் வல்லுனர் அக வேண்டும் என்பது என்றும், விரைவில் தான் சிலம்பத்தை முழுவதுமாக கற்றுவிடுவதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு தேர்ந்த சிலம்ப ஆட்டக்காரர் போல அவர் கம்பு சுற்றும் ஒரு வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் அவர் நடித்து வரும் தெலுங்கு படம் ஒன்றில் சிலம்பம் குறித்த காட்சி வருவதால், படத்தில் இயல்பான சிலம்ப காட்சி இருக்க வேண்டும் என்பதற்காக அவர் சிலம்பம் கற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Share
Banner

Post A Comment: