கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனமும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தர்லின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து திரைப்படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளன.
இந்த திரைப்படத்திற்கு 'கமிஷண்ட்' (Commissioned) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கிபி 52ஆம் ஆண்டில் வாழ்ந்த புனித தாமஸ் என்பவர் இந்திய பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களே இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், இந்த படம் வரும் 2018ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த படத்தில் இந்திய மற்றும் ஹாலிவுட் கலைஞர்கள் பங்கு பெற உள்ளனர் என்பதும், கேரளா, சென்னை மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment: