மகியங்கனை, கெசெல்பொத்த பகுதியில், கலால் திணைக்கள அதிகாரிகள் மீது,
செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாமயடைந்த அதிகாரிகள்
இருவர், மிகவும் ஆபத்தான நிலையில், மஹியங்கனை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இளைஞர்கள்
மூவரை, பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் தாக்குதலுக்கு பயன்படுத்திய
ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
மேற்படி பகுதியில், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட வந்தவர்களை
கைதுசெய்வதற்காகச் சென்ற அதிகாரிகள் மீதே, இவ்வாறு தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து,
திணைக்களத்தைச் சேர்ந்த 8 பேர் அடங்கிய குழுவினர், மேற்படி பகுதியில்
திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது, அங்கு வந்த இளைஞர்கள், அதிகாரிகள் மீது சரமாரியாக தாக்குதல்களை மேற்கொண்டனர்.
மகியங்கனைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ
இடத்துக்கு விரைந்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை
கைதுசெய்ததுடன் தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்
Post A Comment: