கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் ஒரு குழப்ப நிலை இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த்தே. எந்த அரசியல்வாதி எந்த அணிக்கு ஆதரவு தருவார் என்பதை ஊகிக்க முடியாத அளவுக்கு மணிக்கொரு தரம் மாற்றம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்பில் ரஜினியிடம் அரசியல் எதுவும் பேசவில்லை என்றும் வரும் செப்டம்பர் மாதம் தனது மகள் திருமணம் நடைபெறவிருப்பதால் ரஜினிக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காகவே இந்த சந்திப்பு நடந்ததாகவும் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறினார்.
Post A Comment: