இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் சென்னை படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ராஜஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விரைவில் இந்த படத்தின் குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு செல்லவுள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
தளபதி 61' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூன் 22ஆம் தேதி வெளிவரும் என்றும் இந்த படத்திற்காக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வரும் அக்டோபரில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த தகவல்களை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'ஸ்ரீதேனாண்டாள் பிலிஸ் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எனவே 'தளபதி 61' திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தைஅட்லி இயக்கி வருகிறார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: