உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு கடந்த சில மாதங்களாக சோதனை தரும் மாதங்களாக இருந்து வருகிறது. மாடிப்படிகளில் இருந்து கீழே விழுந்து ஏற்பட்ட எலும்பு முறிவு, கவுதமியின் பிரிவு, சமீபத்தில் அவருடைய வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து ஆகியவை அவருக்கு ஏற்பட்ட சோதனைகளில் சில. இதுதவிர சில அரசியல்வாதிகளிடம் இருந்து வரும் சோதனைகள் தனி!
இந்த நிலையில் கமல்ஹாசன் தற்போது புதிய வீடும் அதற்கு அருகில் புரடொக்சன் ஸ்டுடியோ ஒன்றும் கட்டி வருகிறார். இந்த கட்டுமான பணிகள் முடிந்த பின்னர் தனக்கு ஆண்டு ஒன்றுக்கு 600 மணி நேரம் மிச்சமாகும் என்றும், அதனை பயனுள்ள வழியில் கழிக்க முற்படுவேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் கமல்ஹாசன் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் அவ்ர் பொக்கிஷம் போல் சேர்த்து வைத்திருந்த விலைமதிப்பில்லாத புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளது அவர் மனதை அதிகளவு வருத்தமடைய செய்துள்ளது. தீயில் எரிந்த நூல்களில் மறைந்த எழுத்தாளர்களின் கையெழுத்துக்கள் இடம் பெற்றிருந்ததாகவும், இனி அவற்றை பணம் கொடுத்தாலும் கூட வாங்க முடியாது என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment: