Propellerads
Navigation

'பாகுபலி 2' இயக்குனருக்கு தனுஷ், சவுந்தர்யா புகழாரம்

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பாராட்டுகளும் புகழாரங்களும் குவிந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் இந்த படத்தை நேற்று முதல் நாளே பார்த்து இயக்குனருக்கும் படக்குழுவினர்களுக்கும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ' 'பாகுபலி 2' படத்தை பார்த்த பின்னர் மனதில் என்ன இருக்கிறது என்பதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.

இந்த படத்தை வர்ணிக்க எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. பாகுபலி 2 படக்குழுவினருக்கு என்னுடைய சல்யூட். தயவு செய்து இந்த படத்தை தியேட்டரில் பார்க்கவும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் நடிகர் பிரபாசுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

தனுஷின் உறவினரும் அவரை வைத்து ‘விஐபி 2’ படத்தை இயக்குபவருமான சவுந்தர்யா, இந்த படம் குறித்து கூறியபோது, 'ராஜமௌலி சார் நீங்கள் வித்தியாசமானவர். இப்படத்தை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க என்று கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: