பிரமாண்டம் என்றால் உண்மையில் என்ன என்பதை நேற்று உலகம் முழுவதும் திரையில் ரசிகர்களின் கண்முன் நிறுத்திய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியை உலகமே கொண்டாடி வருகிறது. அவர் ஒரு தெலுங்கு பட இயக்குனராக இருந்தாலும் மத, இன அடையாளங்களை கடந்து அவரை அனைவருமே ஒரு இந்திய இயக்குனராகவே கருதுகின்றனர்.
வியாபார ரீதியிலும், விமர்சன ரீதியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தையும் இந்த படத்தின் இயக்குனரையும் இதுவரை யாரும் தவறாக விமர்சனம் செய்யவில்லை. பாராட்டு மழைதான் குவிந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் சற்று வித்தியாசமாக 'பாகுபலி 2' வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: "மக்கள் வாழ்வியல் குறித்த திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் காலம் என்றைக்கு உருவாகுமோ அன்றைக்குத்தான் அரசியலிலும் தெளிவு பெற்றிருக்கிறார்கள் என்று பொருள்.
அதுவரை பாகுபலி போன்ற திரைப்படங்களும் கொண்டாடப்படும். அவர்களை சீரழித்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அரசியல் பிழைப்பு நடத்தும் கூட்டங்களும் கொண்டாடப்படுவார்கள்.
Post A Comment: