Propellerads
Navigation

தொடங்கிவிட்டது 'விஸ்வரூபம் 2' பணிகள்

உலக நாயகன் கமல்ஹாசனின் சூப்பர்ஹிட் படங்களில் ஒன்று 'விஸ்வரூபம்'. தடைகள் பல தாண்டி கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இந்த படம் உலக அளவில் வசூலை குவித்து ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.

இந்த நிலையில் விஸ்வரூபம் படத்தின்போதே அதன் இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை கமல்ஹாசன் முடித்துவிட்டார். இருப்பினும் பல்வேறு பொருளாதார சிக்கல் காரணமாக இந்த படத்தின் பணிகள் காலதாமதம் ஆனது.

தற்போது கமல் ரசிகர்களுக்கு குஷியான செய்தியாக 'விஸ்வரூபம் 2' படத்தின் போஸ்ட் புரொக்சன்ஸ் பணிகள் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. முதல்கட்டமாக சென்னையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு கமல் நடித்த 'தூங்காவனம்', 'உத்தமவில்லன்' மற்றும் பாபநாசம் ஆகிய மூன்று படங்கள் வெளியானது. ஆனால் அதன் பின்னர் கமலை திரையில் பார்க்காமல் ஏக்கம் அடைந்துள்ள அவரது ரசிகர்களுக்கு மிக விரைவில் விஸ்வரூபம் 2 வடிவில் விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: