நடிகை த்ரிஷா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவிய வதந்தியை, அவரது தாய் மறுத்துள்ளார். த்ரிஷாவுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு, ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக, நேற்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து, த்ரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன் கூறுகையில், மலேஷியாவில் நடக்கும், சதுரங்கவேட்டை-2 படப்பிடிப்பில், அரவிந்தசாமியுடன், த்ரிஷா நடித்து வருகிறார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வந்த தகவல் வெறும் வதந்தி; இதை யாரும் நம்ப வேண்டாம், என்றார்.
Post A Comment: