கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள 'டோரா' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சமீபத்தில் ரிலீஸ் ஆன இந்த படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பில் இருந்தே தெரிந்ததே. முன்னணி நடிகர்களின் படங்களின் டீசருக்கு இணையாக இந்த படத்தின் டீசருக்கு கிடைத்த பார்வையாளர்களின் எண்ணிக்கையே இதற்கு சான்று
இந்நிலையில் 'டோரா' திரைப்படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை திரையிட பெரும்பாலான முக்கிய திரையரங்குகள் முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சர்டிபிகேட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை மற்றும் த்ரில் காட்சிகளுக்காக 'ஏ' சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த சென்சார் ரிசல்ட் படக்குழுவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியபோதிலும், 'ஏ' சர்டிபிகேட் பெற்ற பல திரைப்படங்கள் வெற்றி பெற்றதுபோல் இந்த படமும் வெற்றி பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: