பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மதிவாணன் என சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் அறிவித்தார். இந்த தொகுதியில் விரைவில் மதிவாணனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவும் விஜயகாந்த் திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று விஜயகாந்த் திடீரென சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் மேற்கொள்ளும் வழக்கமான பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். இந்த பரிசோதனைக்கு பின் ஓரிரு நாளில் விஜயகாந்த் வீட்டுக்கு திரும்புவார். அதனால் நிர்வாகிகளும் தொண்டர்களும் நேரில் வர வேண்டாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: