Propellerads
Navigation

கட்சியின் பெயரை நாளை மாலை அதிகாரபூர்வ முறையில் அறிவிப்பேன்: தீபா

சென்னை: மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தனியாக கட்சி தொடங்குகிறார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறார். சசிகலா தலைமையில் இன்னொரு அணி உள்ளது. முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறியதுடன் மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாகவும், பரபரப்பான புகாரை தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து புதிய முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார்.

அ.தி.மு.க.வில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த போது ஓ.பன்னீர் செல்வத்தை, தீபா ஜெயலலிதா சமாதியில் வைத்து நேரில் சந்தித்தார். பின்னர் அவரது இல்லத்துக்கும் சென்றார்.  அப்போது பேட்டி அளித்த தீபா அ.தி.மு.க.வில் நானும், ஓ.பன்னீர்செல்வமும் இரு கரங்களாக  இணைந்து செயல்படுவோம் என கூறினார்.

ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ஆர்.கே.நகரில் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அதில் ஓ.பன்னீர்செல்வமும், தீபாவும் பங்கேற்க உள்ளதாகவும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவதற்கு திடீரென தீபா தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் இன்று கூறும் போது, “தீபாவின் நாளைய நிகழ்ச்சி நிரலில் ஆர்.கே. நகர் பொதுக்கூட்டம் எதுவும் இதுவரை இல்லை” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு தீபா அளித்துள்ள பேட்டியில் கூறும்பொழுது, கட்சியின் பெயரை நாளை மாலை அதிகாரபூர்வ முறையில் அறிவிப்பேன் என கூறினார்.

கட்சியின் கொடியும் நாளை அறிமுகப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: