நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால், அவ்வப்போது நலிந்த நடிகர்களுக்கும், பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கும் தனது தேவி அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருவதை அவ்வப்போது பார்த்துள்ளோம்.
இந்நிலையில் சமீபத்தில் சென்னை எண்ணூர் அருகே உள்ள நேதாஜி நகரில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் வசித்து வரும் 25 குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. தங்களுடைய மொத்த உடமைகளையும் தீயில் பறிகொடுத்து உதவியின்றி தவித்து வந்த அந்த குடும்பங்களுக்கு விஷால் தற்போது உதவி செய்துள்ளார்.
தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களில் குழந்தைகள் உட்பட 216 பேர்களுக்கு தேவையான உணவு , போர்வை , சமையலுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். விஷாலின் இந்த உடனடி உதவியால் பயனடைந்த மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்து அவரை வாழ்த்தினர்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தான் செய்து கொடுக்க தயாராக இருப்பதாகவும் விஷால் கூறியுள்ளார். நேதாஜி நகர் மக்களுக்கு உதவும் பணிகளை அம்மக்களோடு இருந்து நடிகர் விஷாலின் குழுவினர் கவனித்து வருகின்றனர்.

Post A Comment: