Propellerads
Navigation

வெல்வது யார்? மக்களின் மந்திரமா? சொக்கனின் தந்திரமா?

உலக நாயகன் கமல்ஹாசனின் சமீபத்திய சமூக வலைத்தள பதிவுகள் அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களாலும் வரவேற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை  கோரவுள்ள நிலையில் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வழக்கம்போல் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில் 'இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசன் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Share
Banner

Post A Comment: