துணை நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் தான் 2016ம் ஆண்டில் அதிக படங்களில் நடித்த நடிகை. இந்த ஆண்டு அவரது கடைசி படமாக வருகிற 30ந் தேதி வெளிவருகிறது மோ. இது பேய் படமாக இருந்தாலும் ஐஸ்வர்யா பேய் இல்லை.
அவர் சினிமாவில் துணை நடிகையாக இருந்து பல்வேறு சோதனைகளை கடந்து ஹீரோயின் ஆகும் கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரது உதவியாளராகவும், மேக்அப்மேனாகவும் முனீஷ்காந்த் நடித்துள்ளார். பேயாக நடித்திருப்பது பூஜா தேவரியா.
டபிள்யூ.டி.எப் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ரோஹித் ரமேஷ், மொமென்ட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஹரிகிருஷ்ணன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை புவன்.ஆர்.நல்லான் இயக்கி உள்ளார். ரமேஷ் திலக், யோகி பாபு, தர்புகா சிவா, உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார்.
"50 சதவிகிதம் காமெடி 50 சதகிவிதம் திகில் கலந்து உருவாகியுள்ள படம். ஒரு பள்ளிக்கூடத்தை வாங்க சிலர் முயற்சிக்கிறார்கள். அதை வாங்க விடாமல் ஒரு பேய் தடுக்கிறது. அது ஏன்? அந்த பள்ளிக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம் என்பது கதை.
பேய் படம் என்றாலும் நல்ல மேசேஜும் சொல்லும் படம். படத்தை பார்த்த வெங்கீஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தார் வாங்கி வெளியிடுகிறார்கள்" என்றார் இயக்குனர் புவன். ஆர் நல்லான்.
Post A Comment: