Propellerads
Navigation

அதிமுக அலுவலகத்தில் கைகலப்பு. சசிகலா புஷ்பா கணவர் படுகாயம்


நாளை அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் மனு வழங்கப்படுகிறது.

இந்த மனுவை வாங்க சசிகலாபுஷ்பா தரப்பினர் வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததால் அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிமுக தொண்டர்கள் அதிகளவில் தலைமை அலுவலகத்தில் குவிந்தனர்.

இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் கணவரும் பிரபல வழக்கறிஞருமான லிங்கேஷ்வரன் திலகர் தனது உதவியாளர்களுடன் அதிமுக அலுவலகத்திற்கு மனுவை வாங்க வந்தார். அப்போது அவரை சுமார் 100 அதிமுக தொண்டர்கள் சுற்றிவளைத்து தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சசிகலா புஷ்பாவின் கணவரை காயத்துடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Share
Banner

Post A Comment: