உதவியாளர்களை வேலையை விட்டு நிறுத்திய சமந்தா.?
நடிகை சமந்தா எப்போதுமே தனது வீட்டு பணியாளர்களையும் தனது உதவியாளர்களையும் தனது குடும்பத்தில் ஒருத்தராகவே நடத்தும் குணம் உடையவர்.. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது வீட்டில் நடந்த நிகழ்வு ஒன்று அவரை மிகவும் சங்கடப்படுத்தி விட்டதாம்.. சமந்தா வைத்திருந்த விலை உயர்ந்த, அவருக்கு ரொம்பவும் முக்கியமான ஒரு மோதிரம் ஒன்று சமீபத்தில் தொலைந்துபோனது.. அதை அவர் தனது காரில் வைத்திருந்தாராம். அவரது உதவியாளர்களில் யாரோ ஒருவர் தான் அதை எடுத்திருக்கவேண்டும் என சமந்தாவுக்கு தெரியவந்ததாம்.
ஆனால் இதற்காக அவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து குற்றவாளிகளாக விசாரித்து, தப்பு செய்யாதவர்களையும் சேர்த்து அவமானப்படுத்துவதில் சமந்தாவுக்கு உடன்பாடு இல்லையாம். அதனால் யாரையும் குற்றம் சொல்லாமல் தனது உதவியாளர்கள் அனைவரையும் வேலையை விட்டு நிறுத்திவிட்டாராம் சமந்தா.. மிகவும் ரகசியமாகவே வைத்திருக்க முயற்சி செய்த இந்த தகவல் இப்போது கசிந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தனக்கு புதிய உதவியாளர்களை சமந்தா தேடிவருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.


Post A Comment: