மிக குறுகிய காலத்தில் இளையதளபதி விஜய், சூர்யா போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டக்கார நடிகை கீர்த்திசுரேஷ், தற்போது பொங்கலுக்கு வெளியாகும் 'பைரவா' படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார். இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் அவருடைய மார்க்கெட் கிராஃப் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பைரவா' படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கீர்த்திசுரேஷ் கூறியதாவது: 'சின்ன வயதில் விஜய்யின் ரசிகையாக இருந்த நான், அவருக்கு ஜோடியாக நடிப்பது நிச்சயம் அதிர்ஷ்டம்தான். எல்லோரும் கூறுவதுபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அதிகம் பேச மாட்டார் என்பது உண்மைதான். ஆனால் படப்பிடிப்பு முடிந்த தினத்தில் விஜய் என்னிடம்' நல்லா நடிச்சிருக்கீங்க' என்று இரண்டே வார்த்தைகளில் என்னுடைய நடிப்பை புகழ்ந்தார்.
விஜய் இந்த ரெண்டு வார்த்தையில் பாராட்டியதே மிக அதிகம் என்று படக்குழுவினர் கூறினர். விஜய்யின் இந்த பாராட்டால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: