Propellerads
Navigation

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: பிரதமருக்கு கவுதமி மீண்டும் கடிதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடிகை கவுதமி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.

அதில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த அவர் சிகிச்சை தொடர்பாக மர்மம் இருப்பதாக கூறி இருந்தார்.

இதற்கு பிரதமர் விளக்கம் தரவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இதுவரை பிரதமர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதையடுத்து நடிகை கவுதமி பிரதமருக்கு மேலும் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவர் மரணத்தில் இருக்கும மர்மம் தொடர்பாக நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துள்ளது.

இது சம்பந்தமாக பலரும் இப்போது கேள்வி எழுப்புகிறார்கள். இது எனக்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட 75 நாள் சிகிச்சை தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்துள்ள தகவல்களை வரவேற்கிறேன். அதே நேரத்தில் நான் கேட்ட கேள்விகள் அது அல்ல.

நோயாளிக்கும், டாக்டர்களுக்கும் இடையே பல ரகசியங்கள் இருக்கலாம். ஆனாலும் இது பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும்.

கோடிக்கணக்கான தமிழக மக்கள் கேள்வியைத் தான் நான் எனது கேள்வியாக கேட்கிறேன். இது பற்றி எனது கடிதத்தில் நான் தெளிவாக கூறி இருந்தேன்.

எனவே நான் எழுதிய கடிதத்திற்கு தங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இதை உங்களுக்கு நினைவூட்டல் கடிதமாக அனுப்புகிறேன். ஒட்டு மொத்த தமிழகமும் பிரதமர் பதிலுக்கு காத்திருக்கிறது. உங்களிடம் பதில் கிடைக்கும் என நம்பிக்கையுடன் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: