பாலிவுட்டில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஜீனத் அமன். குர்பானி படத்தில் இவர் பாடி, ஆடும் ‛லைலா மெயின் லைலா...' பாடலை ரசிகர்கள் இன்றளவும் யாரும் மறக்க மாட்டார்கள். தற்போது இதே பாடல் ஷாரூக்கான் நடித்து வரும் ரயீஸ் படத்தில் ரீ-மீக்ஸ் செய்யப்பட்டுள்ளது. ஜீனத் அமன் ரோலில் பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன் ஆடியிருக்கிறார். இந்தப்பாடலும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதனிடையே தன்னுடைய பாடலில் சன்னி லியோன் ஆடியது பற்றி ஜீனத் அமன் கூறியிருப்பதாவது... ‛‛என்னுடைய பாடல்களான ‛லைலா மெயின் லைலா, ‛தம் மாரோ தம்' போன்ற பாடல்கள் எல்லாம் இப்போது ரீ-மிக்ஸ் ஆவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன்மூலம் இந்தக்கால ரசிகர்களும் அந்தப்பாடல்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் ரசிக்க ஒரு வாய்ப்பாக அமையும்'' என்று கூறியுள்ளார்.
ஷாரூக்கானின் ‛ரயீஸ்' படம் வருகிற ஜன., 25-ம் தேதி, ஹிருத்திக்கின் ‛காபில்' படத்துடன் ரிலீஸாகிறது.
Post A Comment: